Saturday, April 14, 2018

சோதிடம் காட்டும் வருடப் பிறப்பு (Tamil New Year's Day in Chitthirai)

எதற்குமே வாழையடி வாழையாக என்று ஒரு வழக்கம் அல்லது மரபு என்பது உண்டு. வருடப்பிறப்பும் சித்திரையில்தான் நிகழும் என்பதும் மரபு சார்ந்த வழக்கம்தான். ஆனால் அதில் தலையிட்டு மாற்றினார் கருணாநிதி. அவருக்குப்  பின்  ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பழைய மரபை மீட்டார். அந்த காலக்கட்டத்தில் (2012) வெளியிடப்பட்ட 'தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் சித்திரையே'  என்னும் நூலில் வெளியான எனது கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். சோதிடப் பார்வையிலும், சித்தர்களது பழந்தமிழ்ப் பாடல்கள் அடிப்படையிலும் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு இன்றும் அவசியம் இருக்கிறது என்பது வருத்தமளிக்கும் உண்மை. ஆட்சி மாறினால் காட்சி மாறி விடுமோ என்று எண்ணும் வண்ணம், கருணாநிதியைப் பின்பற்றி ஒரு சாரார்  சித்திரை வருடப்பிறப்பை இன்றும் மறுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்கையில்,  நமக்கும் இந்தக் கட்டுரைகளை முன் வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இனியேனும் ஒரு வழி செய்வோம், அறியாமையைப் போக்க முயலுவோம்.